/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோயில்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு
/
பெருமாள் கோயில்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு
ADDED : டிச 30, 2025 05:12 AM

-பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, இன்று காலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம், திருமலைநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவில்கள், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில், அப்புலுபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயில், சின்னதடாகம் கரி வரதராஜ பெருமாள் திருக்கோவில், பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

