ADDED : ஆக 29, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சட்ட உதவி வழங்க, இலவச சட்ட உதவி மையம், கோவை கோர்ட் எதிரிலுள்ள முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மையத்தை, மாவட்ட நீதிபதி விஜயா நேற்று திறந்து வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ரமேஷ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் இப்ராகிம், வக்கீல்கள் பங்கேற்றனர்.