/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பக்தர்கள் தங்கும் ஓய்வு மண்டபம் திறப்பு
/
பக்தர்கள் தங்கும் ஓய்வு மண்டபம் திறப்பு
ADDED : ஆக 24, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பக்தர்கள் தங்கும் ஓய்வு மண்டபத்தை, முதல்வர் ஸ்டாலின், 'காணொலி' வாயிலாக திறந்து வைத்தார்.
ஆனைமலையில் பிரசித்தி பெற்றமாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அமாவாசை மற்றும் பண்டிகை, விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
கோவிலுக்கு வரும்பக்தர்கள் வசதிக்காக, மூன்று கோடியே, 15 லட்சம் ரூபாய் செலவில் ஓய்வு மண்டபம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின், 'காணொலி' வாயிலாக திறந்து வைத்தார். கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.