ADDED : ஜன 18, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : மாநகராட்சி மத்திய மண்டலம், 66வது வார்டுக்கு உட்பட்ட புலியகுளம், அந்தோணியார் கோவில் வீதியில் மோசமான நிலையில் மாநகராட்சி திருமண மண்டபம் இருந்தது. ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இந்த மண்டபம் புனரமைக்கப்பட்டது, அப்பகுதி மக்களுக்கு குறைந்த செலவு கட்டணத்துடன் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மண்டபத்தை மேயர் கல்பனா திறந்துவைத்தார்.
துணை மேயர் வெற்றிசெல்வன், செயற்பொறியாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.