ADDED : ஜூன் 04, 2025 12:28 AM
கருமத்தம்பட்டி:
வாகராயம்பாளையத்தில் வாரச்சந்தை வளாகம் திறந்து வைக்கப்பட்டது.
கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாகராயம்பாளையத்தில், பேரூராட்சி அலுவலகத்துக்கு அருகில், வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. மேற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. சந்தை வளாகத்தை புதுப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1 கோடியே, 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் முடிந்ததால், முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். எம்.பி., ராஜ்குமார், பேரூராட்சி தலைவர் சசிக்குமார், செயல் அலுவலர் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,' இத்தனை ஆண்டுகளாக, மேற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் சந்தை நடந்து வந்தது. மழை வந்தால் காய்கறி வாங்க செல்ல முடியாது. தற்போது, மேற்கூரை, கடைகள் வைக்க மேடை உள்ளிட்டவைகள் கட்டப்பட்டுள்ளதால், இனி எளிதாக சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்க முடியும்,' என்றனர்.