/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆபரேஷன் சிந்துார்' இன்னும் முடியவில்லை: அர்ஜுன் சம்பத்
/
'ஆபரேஷன் சிந்துார்' இன்னும் முடியவில்லை: அர்ஜுன் சம்பத்
'ஆபரேஷன் சிந்துார்' இன்னும் முடியவில்லை: அர்ஜுன் சம்பத்
'ஆபரேஷன் சிந்துார்' இன்னும் முடியவில்லை: அர்ஜுன் சம்பத்
ADDED : நவ 13, 2025 01:41 AM

தொண்டாமுத்தூர்: டில்லி கார் குண்டு வெடிப்பில் பலியான, 15 பேருக்கு, மோட்ச தீபம், பரிகார பூஜை, பேரூர் படித்துறையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நடந்தது.
கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், மாநிலச் செயலாளர் சூர்யா ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு, தர்ப்பணம் கொடுத்தனர்.
அதன்பின், அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:
டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம், நம் தேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை; நிறுத்திதான் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மீண்டும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குண்டுவெடிப்பு சம்பவ த்தில் காயமடைந்தவர்களை, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததை, கரூர் சம்பவத்தில், செந்தில் பாலாஜி நாடகம் ஆடியதுடன் ஒப்பீடு செய்து, தி.மு. க.,வினர் அவதூறு பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தியாவின் மீது உள்ள வெறுப்புணர்வின் அடிப்படையிலேயே, இது போன்ற கருத்துக்களை வெளிப் படுத்துகின்றனர். இது போன்ற நபர்களை, தேசிய புலனாய்வு முகமை கண் காணிக்க வேண்டும்.
இவ்வாறு, அர்ஜுன் சம்பத் கூறினார்.

