/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றி மாரத்தான் போட்டி
/
'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றி மாரத்தான் போட்டி
ADDED : மே 31, 2025 04:27 AM

கருமத்தம்பட்டி; 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றியை கொண்டாடும் வகையிலும், வீர, தீரத்துடன் செயல்பட்ட முப்படை வீரர்களை போற்றும் வகையிலும், கருமத்தம்பட்டியில் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் ஆண்கள், பெண்கள் என, ஏராளமானோர், 3 மற்றும் 5 கி.மீ., பிரிவு போட்டிகளில் பங்கேற்றனர். முதல் ஐந்து இடங்களை பெற்றவர்களுக்கு, ரொக்க பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மாரிமுத்து, பொதுச் செயலாளர் கோபால்சாமி, துணைத்தலைவர் முருகேசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், கருமத்தம்பட்டி மண்டல தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.
போட்டியில் பங்கேற்ற பெண்கள் கூறுகையில், 'நமது தேசத்தை பாதுகாக்க பெண்களை முன்னிறுத்தி, போரிட்டு வெற்றியை பெற்றுத்தந்த வீரர்களுக்கு நன்றி கூறும் விதமாக, நடக்கும் போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது;தேசப்பற்றை வெளிக்காட்டும் விதத்தில் தன்னெழுச்சியாக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றோம், என்றனர்.