/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்ற 'ஆப்பரேஷன் சிந்தூர்' வெற்றி ஊர்வலம்
/
கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்ற 'ஆப்பரேஷன் சிந்தூர்' வெற்றி ஊர்வலம்
கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்ற 'ஆப்பரேஷன் சிந்தூர்' வெற்றி ஊர்வலம்
கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்ற 'ஆப்பரேஷன் சிந்தூர்' வெற்றி ஊர்வலம்
ADDED : மே 17, 2025 05:41 AM

போத்தனூர் : 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றி ஊர்வலம், நேற்று போத்தனுார் சாரதா மில் சாலையில் துவங்கியது.
கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், அனைத்து கட்சியினர், பள்ளி மாணவர்கள், தொழில் அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.
மூவர்ண கொடியுடன் ராணுவம், மத்திய அரசை பாராட்டி கோஷமிட்டவாறு, சங்கம் வீதியை ஊர்வலம் சென்றடைந்தது. எம்.எல்.ஏ., தாமோதரன், கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சந்திரசேகர், முன்னாள் தலைவர் வசந்தராஜன், கிணத்துக்கடவு தொகுதி அ.தி.மு.க., பொறுப்பாளர் சண்முகராஜா, கோவை தெற்கு மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்க தலைவர் சுரேஷ்குமார், சுந்தராபுரம் மண்டல் பா.ஜ., தலைவர் முகுந்தன் மற்றும் பலர் பங்கேற்றனர்.முன்னதாக ஊர்வலம், சுந்தராபுரம் அருகே காமராஜர் நகரில் துவங்கி, மதுக்கரை மார்க்கெட் சாலை வழியாக சங்கம் வீதியில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி மறுத்தனர்.
பா.ஜ., முன்னாள் தலைவர் வசந்தராஜன், சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பரபரப்பு ஏற்பட்டது. பின், போலீசாரின் கோரிக்கையை ஏற்று, சாரதா மில் சாலையில் ஊர்வலத்தை துவக்க முன் வந்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் வாகனங்கள் ஏற்பாடு செய்து அனைவரையும் சாரதா மில் சாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ஊர்வலம் துவங்கியது.