நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் முக்காடு ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் வாக்குறுதிப்படி, 6,750 ரூபாய் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கடந்த 2017ம் ஆண்டு அக்., 1-ம் தேதி முதல் பணப்பலன் கிடைக்கும் வகையில், ஓய்வூதியத்தை திருத்தி அமைக்குமாறு கடந்த ஏப்., 4-ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் கருப்பு முக்காடு ஒப்பாரி போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். மடத்துக்குளம் வட்டகிளை தலைவர் மின்னல்கொடி வரவேற்றார். மாநில செயலாளர் ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.