/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் மாணவர்களுக்கு சர்வதேச நிறுவனங்களில் வாய்ப்பு
/
இந்துஸ்தான் மாணவர்களுக்கு சர்வதேச நிறுவனங்களில் வாய்ப்பு
இந்துஸ்தான் மாணவர்களுக்கு சர்வதேச நிறுவனங்களில் வாய்ப்பு
இந்துஸ்தான் மாணவர்களுக்கு சர்வதேச நிறுவனங்களில் வாய்ப்பு
ADDED : ஏப் 30, 2025 12:20 AM

கோவை; இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள், டி.சி.எஸ்., ஜோகோ, விப்ரோ, ஆர்டிக், காக்னிசன்ட் போன்ற சர்வதேச நிறுவனங்களில், வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு, பணிநியமன ஆணை வழங்கும் விழா, கல்லுாரி கலையரங்கில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிஞர் கவிதாசன், 2 ஆயிரத்து 164 மாணவர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், ''வெற்றிக்கு முக்கியமான தலைமை பண்பு, முடிவெடுக்கும் ஆற்றல், சூழலுக்கு ஏற்ப தகவமைக்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
கல்லுாரி நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, செயலர் பிரியா, வேலைவாய்ப்பு துறை இயக்குனர் டாலின் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.