sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பாரதியார் பல்கலையில் இலவச நீச்சல் பயிற்சி முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு வாய்ப்பு

/

 பாரதியார் பல்கலையில் இலவச நீச்சல் பயிற்சி முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு வாய்ப்பு

 பாரதியார் பல்கலையில் இலவச நீச்சல் பயிற்சி முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு வாய்ப்பு

 பாரதியார் பல்கலையில் இலவச நீச்சல் பயிற்சி முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு வாய்ப்பு


ADDED : மார் 16, 2026 06:31 AM

Google News

ADDED : மார் 16, 2026 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நீச்சல் கற்றுக்கொள்ளும் விதமாக முதல் முறையாக இலவச கோடை கால பயிற்சி வகுப்புகள் பாரதியார் பல்கலையில் வழங்கப்படவுள்ளது.

கோடை துவங்கி விட்டாலே வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வது ஒருபுறம் இருக்க, கல்வி தொடர்பான பயிற்சி வகுப்புகள், விளையாட்டு பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவர். குறிப்பாக, தற்காத்துக் கொள்ளும் விதமான நீச்சல் பயிற்சிக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் தருவர்.

இந்நிலையில், பாரதியார் பல்கலையில் முதல் முறையாக பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. வரும், 20, 21, 22ம் தேதிகளில் ஒரு பிரிவுக்கும், 27, 28, 29ம் தேதிகளில் மற்றொரு பிரிவுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பல்கலையில் இரு நீச்சல்கள் குளங்கள் உள்ளன. 50 மீ., நீளம், 25 மீ., அகலம் கொண்ட பெரிய நீச்சல் குளத்தில் 10 'லேன்'களும், 25 மீ., நீளம், 13 மீ., அகலம் கொண்ட நீச்சல் குளத்தில் ஆறு லேன்களும் உள்ளன.

மாணவர்கள் இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள பல்கலை அழைப்புவிடுத்துள்ளது.

பாதுகாப்பான முறையில்! 'நீச்சல் கற்றுக்கொள்வது தற்காப்புக்கு மட்டுமின்றி குளம், ஏரிகளில் நீச்சல் தெரியாதவர்கள் தத்தளித்தால் காப்பாற்றவும் உறுதுணையாக இருக்கும். எனவே, கோடை காலத்தை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் முறையாக இலவசமாக இப்பயிற்சி அளிக்கிறோம்.

'காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி தரப்படும். முன்பதிவு கட்டாயம். மாணவர் கள் தங்களது அடையாள அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும். 95858 46243, 83443 88187, 96774 48144 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்,' என்கின்றனர் உடற்கல்வி துறை பேராசிரியர்கள்.






      Dinamalar
      Follow us