ஆக்கிரமிப்பு அகற்றி விட்டு மழை நீர் வடிகால் கட்டுங்க
ஆக்கிரமிப்பு அகற்றி விட்டு மழை நீர் வடிகால் கட்டுங்க
ADDED : மார் 16, 2026 06:30 AM

கோவை: கோவை மாநகராட்சி 27வது வார்டு துரைசாமி நாயுடு லே-அவுட்டில் மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. நகர ஊரமைப்பு துறையில் பெற்ற வரைபட அனுமதியின்படி, 30 அடி ரோடு இருக்க வேண்டும்.
ஆவராம்பாளையம் ரோட்டில் இருந்து துரைசாமி நாயுடு லே-அவுட்டுக்குள் நுழையும் பகுதியில் இருந்து திருப்பம் வரை ஆக்கிரமிப்பால் ரோடு சுருங்கியிருக்கிறது. 3 முதல் 7 அடி வரை ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக, அப்பகுதியினர் கூறுகின்றனர். மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்ததும், சர்வேயர்கள் அளந்து பார்த்தபோது, ஆக்கிரமிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றாமல் மழை நீர் வடிகால் கட்டுவதற்கு குழி தோண்டப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
கவுன்சிலர் அம்பிகா மற்றும் தி.மு.க.வினர் நேரில் வந்து சமரசம் செய்தனர். தேர்தல் நேரம் என்பதால் ஆக்கிரமிப்பை அகற்ற வாய்ப்பில்லை. தேர்தலுக்கு பின் அளவீடு செய்து, மீண்டும் கட்டிக் கொள்ளலாம் என கூறிச் சென்றிருக்கின்றனர். மக்களின் ஆட்சேபனையை மீறி, மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது.
