/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலை டிப்ளமோ விண்ணப்பிக்க வாய்ப்பு
/
வேளாண் பல்கலை டிப்ளமோ விண்ணப்பிக்க வாய்ப்பு
ADDED : ஆக 21, 2025 08:33 PM
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை டீன் வெங்கடேச பழனிசாமி அறிக்கை:
வேளாண் பல்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கு, 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், http://tnau.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். வரும், 29ம் தேதி வரை இந்தத் தளம் திறந்திருக்கும். ஏற்கனவே விண்ணப்பித்து தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. ஏற்கனவே விண்ணப்பித்து, அதை முழுமை செய்யாத, சமர்ப்பிக்காத மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் விணணப்பிக்கலாம். இதற்கு தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். விவரங்களுக்கு, 9488635077, 9486425076 என்ற எண்களில், அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.