/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்துார் அரசு கல்லுாரியில் இன்றும் விண்ணப்பிக்க வாய்ப்பு
/
தொண்டாமுத்துார் அரசு கல்லுாரியில் இன்றும் விண்ணப்பிக்க வாய்ப்பு
தொண்டாமுத்துார் அரசு கல்லுாரியில் இன்றும் விண்ணப்பிக்க வாய்ப்பு
தொண்டாமுத்துார் அரசு கல்லுாரியில் இன்றும் விண்ணப்பிக்க வாய்ப்பு
ADDED : மே 29, 2025 11:56 PM
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லூரியில், இந்தாண்டு இளங்கலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க, கடந்த, 8ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுவரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் பலன் பெறும் வகையில், இன்று (மே 30) ஒரு நாள் மட்டும், விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று கல்லூரியில் செயல்படும் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில், இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், சிறப்பு பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் நேற்று (மே 29) வெளியிடப்பட்டது. பொதுப் பிரிவினருக்கான தரவரிசையில் பட்டியல் இன்று (மே 30) வெளியிடப்பட உள்ளது. வரும் ஜூன் 2 முதல் 4ம் தேதி வரை, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், ஜூன் 4 முதல் 14ம் தேதி வரை, பொது பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறும் என, கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.