/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.,ல் பயில்வோர் கல்வி உதவித்தொகை பெற வாய்ப்பு
/
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.,ல் பயில்வோர் கல்வி உதவித்தொகை பெற வாய்ப்பு
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.,ல் பயில்வோர் கல்வி உதவித்தொகை பெற வாய்ப்பு
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.,ல் பயில்வோர் கல்வி உதவித்தொகை பெற வாய்ப்பு
ADDED : நவ 19, 2024 11:45 PM
கோவை; மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி. என்.ஐ.டி.,மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் சீர்மரபினர் இன மாணவர்கள் 2024--25- ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறவும் புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலையில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன வகுப்பைச் சார்ந்த, மாணவர்களின் குடும்ப ஆண்டு வருவாய். 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆண்டுக்கு அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகைக்கு, 2024--25ம் கல்வியாண்டில் புதியதாக சேர்ந்தவர்கள் அல்லது புதுப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், சென்னை-- 5. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்கம் சென்னை-- 5, கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
அல்லது https://bcmbcmw.tn.gov.in/ welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். புதுப்பிக்க வேண்டிய விண்ணப்பங்களை டிச.,15 க்குள்ளும், புதிய விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு ஜன.,15 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் கூறியுள்ளார்.