/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் படிக்க வாய்ப்பு
/
இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் படிக்க வாய்ப்பு
இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் படிக்க வாய்ப்பு
இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் படிக்க வாய்ப்பு
ADDED : ஜூன் 17, 2025 11:03 PM
கோவை; கோவை சிங்காநல்லுார் சாலையில் அமைந்துள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அரசு மருத்துவ கல்லுாரியில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகள் விரைவில் துவங்க செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லுாரி 40 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 510 படுக்கை வசதிகள் கொண்டது. எம்.பி.பி.எஸ்., எம்.டி., டிப்ளமோ நர்சிங், படிப்புகள் உள்ளன. தற்போது பி.எஸ்சி., நர்சிங் படிப்புகள் துவக்கப்படவுள்ளன.
நடப்பாண்டு முதல் இக்கல்லுாரியில் நர்சிங் படிப்புகள் துவங்க, அனைத்து பணிகளும் கல்லுாரி நிர்வாகம் தரப்பில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் கல்லுாரியில் உள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, எம்.பி.பி.எஸ்., பிரிவில் 100 சீட், எம்.டி., பிரிவில் 5 சீட் உள்ளது.
இதுகுறித்து, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லுாரி டீன் ரவீந்திரனிடம் கேட்டபோது, ''இ.எஸ். ஐ., மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லுாரியில், பி.எஸ்சி., நர்சிங் 60 இடங்களும், பி.எஸ்சி., நர்சிங் (போஸ்ட் பேசிக்) படிப்புகள் 40 இடங்களுடன், துவங்க கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனுமதி கிடைத்தவுடன் நடப்பாண்டில் துவங்கப்படும்,'' என்றார்.