/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு மைதானத்தில் கட்டடங்கள் கட்ட எதிர்ப்பு
/
விளையாட்டு மைதானத்தில் கட்டடங்கள் கட்ட எதிர்ப்பு
விளையாட்டு மைதானத்தில் கட்டடங்கள் கட்ட எதிர்ப்பு
விளையாட்டு மைதானத்தில் கட்டடங்கள் கட்ட எதிர்ப்பு
ADDED : டிச 06, 2025 05:34 AM
வால்பாறை: வால்பாறையில், கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் அரசு கட்டடம் கட்டும் பணிக்கு மா.கம்யூ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வால்பாறை மா.கம்யூ.,கட்சியின் தாலுகா பொதுச்செயலாளர் பரமசிவம் கோவை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை நகரில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி, பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும் பங்கு பெற்று, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கல்லுாரியில் மாணவர்கள் பயன்பாட்டில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அரசு கட்டடங்கள் கட்டும் பணி நடக்கவுள்ளது. மாணவர்கள் விளையாட ஒரே ஒரு விளையாட்டு மைதானமே உள்ள நிலையில், அந்த இடத்தையும் ஆக்கிரமித்து அரசு கட்டடம் கட்டுவது ஏற்புடையதல்ல.
எனவே, தனியார் எஸ்டேட் நிர்வாகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ள இடங்களை மீட்டு, அந்த இடத்தில் அரசு கட்டடங்கள் கட்ட வேண்டும்.
கல்லுாரி மாணவர்களை பாதிக்கும் வகையில் விளையாட்டு மைதானத்தில் கட்டடம் கட்ட, மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க கூடாது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

