/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற எதிர்ப்பு
/
சூலுார் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற எதிர்ப்பு
ADDED : ஜன 07, 2025 11:54 PM
கோவை; சூலூர் பேரூராட்சியை நகராட்சியாக மாற்றக்கூடாது- என்று வலியுறுத்தி, திருவோடு ஏந்தி வந்து கலெக்டரிடம் சூலுார் மக்கள் மனு கொடுத்தனர்.
தமிழக அரசு சமீபத்தில், பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்றுவதற்கான அரசாணையை வெளியிட்டது. அதன்படி சூலூர் பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்பட உள்ளது.
இந்நிலையில், சூலூர் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி, சூலூர் பேரூராட்சியில் உள்ள கலங்கல் மற்றும் காங்கேயம்பாளையம் கிராம ஊராட்சி மக்கள் திருவோடு ஏந்தி வந்து, கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவில், 'சூலூர் நகராட்சியாக தரம் உயர்த்தும் பட்சத்தில் வரி அதிகரிக்கும். 100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும். மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும். அதனால் சூலுாரை நகராட்சியாக மாற்ற வேண்டாம்' என கூறியுள்ளனர்.

