ADDED : மார் 20, 2026 09:07 PM
கோவை: மொழி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற சீமானின் கருத்துக்கு, 'ஓபிசி ரைட்ஸ்' கண்டனம் தெரிவித்துள்ளது.
அமைப்பின் தலைவர் தலைவர் ரத்தினசபாபதி அறிக்கை:
உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் நீண்ட காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பின் தள்ளப்பட்டவர்கள் முன்னேறுவதற்காக கொடுக்கப்பட்ட ஏணியை, நான் மொழி அடிப்படையில்தான் தருவேன் என சீமான் கூறியுள்ளார்.
இது, இட ஒதுக்கீடு தத்துவத்தை, அரசமைப்புச் சட்டத்தை, தங்களது உரிமைக்காக போராடி வரும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் அனைவரையும் காயப்படுத்தும் செயல்.
நா.த.க. தலைவர் சீமான், இட ஒதுக்கீடு வரலாற்றை 1854ம் ஆண்டு முதல் படித்து தெரிந்து கொள்வது நல்லது. இட ஒதுக்கீடு என்பது மொழி அடிப்படையிலோ, பூகோள பிரிவுகளின் அடிப்படையிலோ கொடுக்கப்படுவது அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
