/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்பந்து சங்க தேர்தலுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு: ஜன., 5ம் தேதி நடக்கவிருந்த தேர்தல் ஒத்திவைப்பு
/
கால்பந்து சங்க தேர்தலுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு: ஜன., 5ம் தேதி நடக்கவிருந்த தேர்தல் ஒத்திவைப்பு
கால்பந்து சங்க தேர்தலுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு: ஜன., 5ம் தேதி நடக்கவிருந்த தேர்தல் ஒத்திவைப்பு
கால்பந்து சங்க தேர்தலுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு: ஜன., 5ம் தேதி நடக்கவிருந்த தேர்தல் ஒத்திவைப்பு
ADDED : டிச 23, 2024 07:00 AM

கோவை ; கோவை மாவட்ட கால்பந்து சங்க தேர்தல், விதிமுறைப்படி அமையவில்லை என்றஎதிர்ப்பு எழுந்ததால்ஜன., 5ம் தேதி நடக்கவிருந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாக குழுவை நியமித்துள்ளது.
இக்குழு, கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராஜ், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
வரும் ஜன., 5ம் தேதி கோவை மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு,நேரு ஸ்டேடியம் அருகே ஆபிசர்ஸ் கிளப்பில், நேற்று வேட்பு மனுக்கள், தேர்தல் குழுவால் ஆய்வு செய்யும் பணி துவங்கியது. அங்கு வந்த ஒரு தரப்பினர் கால்பந்து சட்ட விதியை மதிக்காமல், தேர்தல் நடத்துவதாக எதிர்ப்பு தெரிவித்ததால்,பரபரப்பு ஏற்ப்பட்டது.
ஒரு தரப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
2023, ஆக., 8ம் தேதி நடந்த கால்பந்து சங்க தேர்தலில், சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நான் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த, 9 மாதங்களாகஏ, பி, சி டிவிஷன் போட்டி உள்ளிட்ட அனைத்தையும், நடத்தி முடித்துள்ளோம்.
தற்போது, தமிழகத்தில் சங்க தேர்தல் நடத்த குழு அமைக்கப்பட்டது. எந்தெந்த மாவட்டங்களில் பிரச்னைகள் இருக்கிறதோ, அங்கு தீர்வு கண்டு தேர்தல் நடத்த அக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் எந்த பிரச்னையும் இல்லாமல், தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் உள்ளிட்டவற்றில் குழப்பம் உள்ளது.தேர்தல் விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. இதை மறுபரிசீலனை செய்து, சரியான முறையில் தேர்தல் நடத்த மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மற்றொரு தரப்பை சேர்ந்த அனில் கூறுகையில்,''தேர்தலை மற்றொரு தரப்பினர் எந்தெந்த வழிகளிலோ தடுக்க நினைக்கின்றனர்,'' என்றார்.
ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராஜ் கூறுகையில்,''இன்று(நேற்று) வேட்பாளர்கள் மனு ஆய்வு செய்யப்பட்டது. தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்,'' என்றார்.