/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு
/
டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு
ADDED : ஜூலை 15, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி; சோமனூரில் டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'சோமனுார், கருமத்தம்பட்டி பகுதியில் ஆறு டாஸ்மாக் கடைகள் மற்றும் ஒரு எப்எல்.2 பார் உள்ளன. தற்போது, சந்தை பேட்டை ரோட்டில் மேலும் ஒரு கடை திறந்துள்ளனர். வாரச்சந்தை, சினிமா தியேட்டர், வழிபாட்டு கூடங்கள் உள்ள பகுதியில் மேலும் ஒரு கடை திறந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது' என்றனர்.