/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிஷ்ணா பல் மருத்துவ கல்லுாரியில் வாய் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி

ADDED : மே 15, 2025 11:41 PM
கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 'டென்டல் கார்னிவல்' கண்காட்சி நேற்று துவங்கியது. 17ம் தேதி வரை பொதுமக்களுக்கு பல், வாய் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியை எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் துவக்கிவைத்தார். கண்காட்சியில், பல் ஆரோக்கியம் தொடர்பான மாதிரிகள், தொழில்நுட்பங்கள், சிகிச்சை முறைகள், விழிப்புணர்வு விளக்கங்கள், இது தொடர்பான விளையாட்டு போட்டிகள் என பல்வேறு அம்சங்கள் உள்ளன. பொதுமக்கள் குழந்தைகளுடன் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியது அவசியம்.
இதில், சி.இ.ஓ., ராம்குமார், ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லுாரி முதல்வர் தீபானந்தன், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.