'காசாகிராண்ட்' அறிமுகப்படுத்தும் ஆர்ச்சர்ட்ஸ் அப்பார்ட்மென்ட்
'காசாகிராண்ட்' அறிமுகப்படுத்தும் ஆர்ச்சர்ட்ஸ் அப்பார்ட்மென்ட்
ADDED : நவ 23, 2024 11:33 PM

கோவை: கோவை, கண்ணம்பாளையத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட், புதிதாக 'காசாகிராண்ட் ஆர்ச்சர்ட்ஸ்' அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
கிளாசிக்கல் கட்டடக்கலையுடன், நவீன வசதிகள் கொண்ட 207 அப்பார்ட்மென்டுகள் அமையவுள்ளன. ஒன்று, இரண்டு மற்றும் மூன்று பி.எச்.ஏ., அடுக்குமாடி வீடுகள், ரூ.54 லட்சத்திலிருந்து துவங்குகிறது.
சுமார், 9.52 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இவ்வளாகத்தில், 7,000 சதுரடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கொண்ட கிளப் ஹவுஸ், 4,700 சதுர அடி பரப்பளவு கொண்ட நீச்சல்குளம், ஒரு மினி திரையரங்கம், ஸ்கை சினிமா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. 56 சதவீதம் திறந்தவெளி பகுதியைக் கொண்டுள்ளது.
சிங்காநல்லுாரிலிருந்து, 10 நிமிட துாரத்தில் அமைந்துள்ளதால் நகரின் முக்கிய பகுதிகளுக்கு எளிதாக அணுக முடியும். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மிக அருகில் உள்ளன.
மேலும் தகவல்களை, https://www.casagrand.co.in/ என்ற இணையதள முகவரியில் இருந்து அறிந்துகொள்ளலாம்.
