/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு நாட்கள் இறைச்சி கடைகள் மூட உத்தரவு
/
இரு நாட்கள் இறைச்சி கடைகள் மூட உத்தரவு
ADDED : ஜன 11, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:திருவள்ளுவர் தினமான வரும், 16ம் தேதியும், வள்ளலார் தினமான வரும், 25ம் தேதியும் ஆடு, மாடு மற்றும் கோழி வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகளை மூட வேண்டும்.
அன்றைய தினம் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சத்தி ரோடு, போத்தனுார் அறுவை மனைகள் மற்றும் துடியலுார் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது.
உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.