/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபாய நிலையில் கட்டடம் இடித்து அகற்ற உத்தரவு
/
அபாய நிலையில் கட்டடம் இடித்து அகற்ற உத்தரவு
ADDED : ஜூலை 01, 2025 10:28 PM
கோவில்பாளையம்; சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கள்ளிப்பாளையம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு துவக்கப்பள்ளியில், கழிப்பறை, அங்கன்வாடி மையம் கட்டப்படுகின்றன.
கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வன் நேற்றுமுன்தினம் இங்கு ஆய்வு செய்தார். அங்கு ஏற்கனவே உள்ள கழிப்பறை கட்டடம் மோசமான நிலையில் உள்ளதால், அதை இடித்து அகற்றிவிட்டு, புதிய கழிப்பறை கட்ட உத்தரவிட்டார். அங்கன்வாடி மைய கட்டடம் கட்டும் பணியை ஆய்வு செய்தார். கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் இணைந்து காளிங்கராயன் குளத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். அப்பணியை ஆய்வு செய்தார்.