/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உத்தரவு
/
நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உத்தரவு
நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உத்தரவு
நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உத்தரவு
ADDED : மே 29, 2025 12:09 AM
கோவை; நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதுடன், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் வகையில் பயிற்றுவிப்பில் கவனம் செலுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 83 ஆரம்பப் பள்ளிகள், 37 நடுநிலை, 11 உயர்நிலை, 17 மேல்நிலைப் பள்ளிகள் என, 148 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் வரும், 2ம் தேதி திறக்கப்படுகிறது. இதையடுத்து, பள்ளிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பள்ளி தலைமையாசிரியர்களுடன் நேற்று, ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.
ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கில் நடந்த கூட்டத்தில் கமிஷனர் பேசுகையில்,''மாநகராட்சி பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், மாணவர் சேர்க்கை கடந்தாண்டுகளை காட்டிலும் அதிகரித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணிபுரிய வேண்டும். கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம் உள்ளிட்ட தேவைகள் குறித்து, என்னிடம் கடிதமாக சமர்ப்பிக்கலாம்,'' என்றார்.
துணை கமிஷனர் குமரேசன், மாநகராட்சி கல்வி அலுவலர் தாம்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.