தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஸ்சில் சேவை குறைபாடு இழப்பீடு வழங்க உத்தரவு

 பஸ்சில் சேவை குறைபாடு இழப்பீடு வழங்க உத்தரவு

 பஸ்சில் சேவை குறைபாடு இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : மார் 04, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: டிக்கெட் முன்பதிவு செய்தும், உரிய காரணம் கூறாமல் நீண்டநேரம் தாமதமாக பஸ்சை இயக்கிய பஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. ரெட்பஸ் செயலி மூலம், காந்திபுரம், ஏ1 டிராவல்ஸில் 2025 மே 10ம் தேதி, இரவு 9:45 மணிக்கு, குடும்பத்துடன் சொந்த ஊர் செல்ல, டிக்கெட் முன்பதிவு செய்தார்.

பஸ் உரிய நேரத்தில் புறப்படவில்லை. பயணிகளுக்கும் முறையாக தகவல் தெரிவிக்காமல், 10 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. பயணத்தின் போது, திருமூர்த்தியின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

முதலுதவிக்குக் கூட, பஸ்சில் எந்த வசதியும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக புகார் அளிக்க, செயலியில் கொடுக்கப்பட்ட தொடர்பு எண்கள் பயன்பாட்டில் இல்லை.

தனியார் பேருந்து ஊழியர்களின் நடத்தை, தாமத பயணம், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்க கோரி, 2025 ஜூன் 4ம் தேதி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

விசாரித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ' புகார்தாரருக்கு ஏற்பட்ட சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு ரூ.20 ஆயிரம், வழக்கு செலவுத்தொகை ரூ.10 ஆயிரம் சேர்த்து, பேருந்து நிறுவனம் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us