/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ப்பு நாய்க்கு காயம்; இழப்பீடு வழங்க உத்தரவு
/
வளர்ப்பு நாய்க்கு காயம்; இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : நவ 04, 2025 12:15 AM
கோவை: பராமரிப்பு பணியின் போது வளர்ப்பு நாய்க்கு காயம் ஏற்பட்டதால், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
வடவள்ளியை சேர்ந்த ரவீந்திரன் என்பவர், 'லாசோ அப்சோ' என்ற வகை நாய் வளர்த்து வந்தார். நாய்க்கு, நகம் வெட்டுதல், குளிக்க வைத்தல் உள்ளிட்ட பராமரிப்புக்காக, பி.என்.புதுாரிலுள்ள, கோவை பெட்ஸ் கார்னிவல் என்ற செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையத்திற்கு 2024, ஜூன், 17ல் அழைத்து சென்றார். பராமரிப்பு முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகு நாய், தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்தது. அப்போது, நாயின் வயிற்றிலிருந்து ரத்தம் வந்தது.
இதனால் அதிச்சியடைந்த அவர், உடனடியாக பராமரிப்பு பணி மையத்திற்கு தொடர்பு கொண்ட போது, ரவீந்திரனை தரக்குறைவாக பேசினர். காயம் ஏற்படுத்தியதற்கு முறையான பதில் அளிக்கவில்லை.
மற்றொரு கால்நடை மருத்துவரிடம், வளர்ப்பு நாயை பரிசோதித்த போது, வெட்டு காயம் இருந்தது. முடி வெட்டும் போது, ஊழியர் அலட்சியத்தால் வயிற்றில் குத்துப்பட்டு காயம் ஏற்பட்டது தெரிய வந்தது.
இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த கூடுதல் ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர் சேவைகுறைபாடு செய்துள்ளதால், மனுதாரரிடம் நாய் பராமரிப்புக்கு பெற்ற தொகை, 2,550 ரூபாய் திருப்பி தர வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய், வழக்கு செலவு, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

