/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடமானம் வைத்த நில ஆவணம் மாயம் ; ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
/
அடமானம் வைத்த நில ஆவணம் மாயம் ; ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
அடமானம் வைத்த நில ஆவணம் மாயம் ; ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
அடமானம் வைத்த நில ஆவணம் மாயம் ; ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : பிப் 16, 2024 02:00 AM
கோவை;அடமானம் வைக்கப்பட்ட நிலத்தின் அசல் ஆவணத்தை தொலைத்து விட்டதால், விவசாயிக்கு 7.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.
கோவை அருகேயுள்ள வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சதானந்த் சக்தி வேல். வடவள்ளியிலுள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையில், வேளாண்மை நிதி கணக்கு வைத்திருந்தார். இவருக்கு சொந்தமான நிலத்தின் அசல் ஆவணங்களை அடமானம் வைத்து, 2009,மார்ச், 17ல், பயிர்கடன் பெற்றார். வங்கி கடன் முழுவதையும் செலுத்திய அவர், அடமானம் வைத்த நில ஆவணங்களை திருப்பி தருமாறு கேட்டார். அப்போது, ஒரிஜினல் நில ஆவணங்கள் தொலைந்து விட்டதாகவும், இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் வங்கி மேலாளர் தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், நில ஆவணங்களை திருப்பி தரக்கோரியும், பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அடமானத்தை(எம்.ஓ.டி.,) ரத்து செய்து தருமாறு வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது, பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்து வந்தனர்.
பாதிக்கப்பட்ட சதானந்த சக்திவேல், இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவு:
அடமானம் வைத்த நிலத்தின் அசல் ஆவணங்களை, வங்கி நிர்வாகம் திருப்பி தர தவறியதால், மனுதாரருக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய, 7.5 லட்சம் ரூபாய் வழங்குவதோடு, சொத்தின் அசல் ஆவண எண்ணின் கீழ் பதிவு செய்யப்பட்ட அடமானத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடன் பாக்கி இல்லை என்பதற்கான சான்றிதழ் மற்றும் வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார்.