/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரடைப்பால் இறந்தவருக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவு
/
மாரடைப்பால் இறந்தவருக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவு
மாரடைப்பால் இறந்தவருக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவு
மாரடைப்பால் இறந்தவருக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவு
ADDED : ஜூலை 04, 2025 10:59 PM
கோவை; மாரடைப்பால் இறந்தவருக்கு, மருத்துவ காப்பீடு தொகை வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை அருகே உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், ஆதித்யா பிர்லா ெஹல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்திருந்தார். முருகேசனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், 2024-ல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கு, 97,000 ரூபாய் மருத்துவ செலவானது. இத்தொகையை வழங்கக்கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தபோது, பணம் வழங்க மறுத்தனர்.
முருகேசனுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார். அதன் பிறகு, இன்சூரன்ஸ் நிறுவனம் முழு தொகை வழங்காமல், 20,000 ரூபாய் குறைத்துக் கொடுத்தனர். இழப்பீடு வழங்கக்கோரி, அவரது மனைவி சாந்தா, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.