/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பென்சன்தாரர் மனைவிக்கு சிகிச்சை கட்டணம் தர உத்தரவு
/
பென்சன்தாரர் மனைவிக்கு சிகிச்சை கட்டணம் தர உத்தரவு
பென்சன்தாரர் மனைவிக்கு சிகிச்சை கட்டணம் தர உத்தரவு
பென்சன்தாரர் மனைவிக்கு சிகிச்சை கட்டணம் தர உத்தரவு
ADDED : நவ 18, 2024 10:50 PM
கோவை ; பென்சன்தாரர் மனைவி மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான கட்டணம் வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, ஆவாரம்பாளையத்தை சேர்ந்த ரவி, காவல்துறையில் சிறப்பு எஸ்.ஐ.,ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது பென்சன் தொகையில், குடும்பத்தினருக்கு மாதந்தோறும், மருத்துவ காப்பீட்டிற்கு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இவரது மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த, 2021, ஜன., 11 ல், மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டது.
இதற்கான மருத்துவ செலவு, 1.58 லட்சத்திற்கு, கிளைம் செய்வதற்காக, அரசு கருவூலத்துறை இயக்குனர் வாயிலாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார்.
ஆனால், காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் இல்லாமல் சிகிச்சை பெற்றதாக கூறி விண்ணப்பத்தை நிராகரித்தனர்.
பாதிக்கப்பட்ட ரவி, இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ''மருத்துவ செலவு தொகையில், 47,677-ரூபாய் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடு மற்றும் வழக்கு செலவு தொகை, 20,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.