/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெந்நீர் கொட்டி காயம்பட்டவருக்கு சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவு
/
வெந்நீர் கொட்டி காயம்பட்டவருக்கு சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவு
வெந்நீர் கொட்டி காயம்பட்டவருக்கு சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவு
வெந்நீர் கொட்டி காயம்பட்டவருக்கு சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவு
ADDED : ஜூலை 12, 2025 01:18 AM
கோவை; வெந்நீர் கொட்டி காயம்பட்டவருக்கு, மருத்துவ சிகிச்சை கட்டணம் வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
மேட்டுப்பாளையம், அன்னுார் ரோட்டை சேர்ந்தவர் மோகன்கராஜ்; இவர், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், மருத்துவ காப்பீடு செய்திருந்தார்.
2024, பிப்., 18ல், வீட்டில், காஸ் ஸ்டவ்வில் வெந்நீர் போட்டு இறக்கி வைத்திருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது மீது கவிழ்ந்ததில், உடலில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்கான கட்டணம், 61,694 ரூபாய் மருத்துவமனைக்கு செலுத்தினார்.
சிகிச்சை கட்டணம் வழங்கக் கோரி, ரசீதுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார். ஆனால், மருத்துவ கட்டணம் தராமல் விண்ணப்பத்தை நிரகாரித்தனர்.
பாதிக்கப்பட்ட அவர், மருத்துவ கட்டணம் மற்றும் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மருத்துவ சிகிச்சை கட்டணம், 59,044 ரூபாய் திருப்பி செலுத்த வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

