/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணுக்கு சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவு
/
பெண்ணுக்கு சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவு
ADDED : அக் 17, 2025 11:38 PM
கோவை: இன்சூரன்ஸ் நிறுவனம் பெண்ணுக்கு, சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவிடப்பட்டது.
கோவை, ஒப்பணக்கார வீதியை சேர்ந்தபாண்டியன் என்பவர், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப மருத்துவ காப்பீடு செய்திருந்தார்.
அவரது மனைவி சத்யபாமாவுக்கு,65, கடந்த பிப்., 4ல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது . கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவ சிகிச்சைக்கான தொகை, 73,834 ரூபாய் வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தும், பணம் வழங்கப்படவில்லை.
இதனால், இன்சூரன்ஸ் நிறுவன விவகாரங்களை விசாரிக்கும், சென்னையிலுள்ள மத்திய அரசின் ஓம்பட்ஸ்மன் அமைப்பிடம் பாண்டியன் புகார் அளித்தார்.
விசாரித்த அமைப்பு, பாதிக்கப்பட்ட சத்யபாமாவுக்கு, சிகிச்சை கட்டணமாக, 70,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது.