/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளிக்கு விற்பனை 'தாம் துாம்' : திருட்டு தடுக்க கண்காணிப்பு தீவிரம்
/
தீபாவளிக்கு விற்பனை 'தாம் துாம்' : திருட்டு தடுக்க கண்காணிப்பு தீவிரம்
தீபாவளிக்கு விற்பனை 'தாம் துாம்' : திருட்டு தடுக்க கண்காணிப்பு தீவிரம்
தீபாவளிக்கு விற்பனை 'தாம் துாம்' : திருட்டு தடுக்க கண்காணிப்பு தீவிரம்
ADDED : அக் 17, 2025 11:37 PM

கோவை: தீபாவளிக்கு ஆடைகள், இனிப்புகள் மட்டுமின்றி அலங்கார பொருட்கள் விற்பனையும் களைகட்டியுள்ள நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும், 20ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பண்டிகையை முன்னிட்டு டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் பொருட்கள் வாங்குவதற்கு, கடந்த ஒரு வாரமாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக, துணிக்கடைகளில் சிறுவர், பெரியவர் ஆர்வமுடன் ஆடைகள் வாங்கிவருகின்றனர். இனிப்பு விற்பனையும் சூடாக நடந்துவருகிறது. இத்துடன், செருப்பு, அலங்கார பொருட்களின் விற்பனையும் நடந்துவருகிறது.
காந்திபுரம், 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் மாலை நேரங்களில் அதிகமாக காணப்படுகிறது.
கடைசி நேரத்தில் பொருட்கள் வாங்குபவர்களால் இன்றும், நாளையும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றசெயல்களை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு கோபுரங்கள் வாயிலாகவும், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களாலும் போலீசார் கண்காணித்து, ஒலிப்பெருக்கிகள் வாயிலாக எச்சரித்து வருகின்றனர்.
தவிர, நகரம், புறநகரங்களில் வாரச்சந்தைகளில் ஆடு, கோழி விற்பனையும் அமோகமாக நடந்துவருகிறது.
விற்பனை ஒருபுறம் இருக்க பள்ளி, கல்லுாரிகளில் தீபாவளிக்கு பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து போலீசார், தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.