/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எஸ்.மெர்கன்டைல் பைனான்ஸ் அதிபரை ஆஜர்படுத்த உத்தரவு
/
கே.எஸ்.மெர்கன்டைல் பைனான்ஸ் அதிபரை ஆஜர்படுத்த உத்தரவு
கே.எஸ்.மெர்கன்டைல் பைனான்ஸ் அதிபரை ஆஜர்படுத்த உத்தரவு
கே.எஸ்.மெர்கன்டைல் பைனான்ஸ் அதிபரை ஆஜர்படுத்த உத்தரவு
ADDED : அக் 15, 2024 11:59 PM
கோவை : கே.எஸ்.மெர்கன்டைல் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான அதன் அதிபரை, கோர்ட்டில் ஆஜர்படுத்த, நீதிபதி உத்தரவிட்டார்.
கோவையில் செயல்பட்டு வந்த கே.எஸ்.மெர்கன்டைல் என்ற நிதி நிறுவனம், டெபாசிட்தாரர்களிடம், 21 கோடிரூபாய் மோசடி செய்த வழக்கு, கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் கைதான, நிதி நிறுவன அதிபர் சுதர்சன், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
அவருக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். டான்பிட் கோர்ட்டில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி செந்தில்குமார், அன்றைய தினம், சுதர்சனை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.