/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல்பருமன் சிக்கல் குறித்து விழிப்புணர்வுக்கு உத்தரவு
/
உடல்பருமன் சிக்கல் குறித்து விழிப்புணர்வுக்கு உத்தரவு
உடல்பருமன் சிக்கல் குறித்து விழிப்புணர்வுக்கு உத்தரவு
உடல்பருமன் சிக்கல் குறித்து விழிப்புணர்வுக்கு உத்தரவு
ADDED : ஜூன் 29, 2025 12:28 AM
கோவை : குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் உடல் பருமன் குறித்து, தொடர்ந்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார் தெரிவித்தார்.
உணவு முறைகள், உடல் இயக்க செயல்பாடுகள் குறைந்ததன் காரணமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மத்தியில் உடல் பருமன் பிரச்னை அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக எதிர்கால இளைஞர்கள், நோயாளிகளாக வாய்ப்புகள் அதிகம் என, மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கவும், ஸ்நாக்ஸ் இடைவேளை சமயங்களில் பிஸ்கட், கேக் போன்ற துரித உணவுகளை தவிர்க்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநில சுகாதாரத்துறை இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை முதன்மை செயலர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ''ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் (ஆர்.பி.எஸ்.கே.,) தொடர்ந்து பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சத்துணவு திட்டத்தின் கீழ், பள்ளிகளில் காலை, மாலையும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. உடல்பருமன் சார்ந்தும், துரித உணவுகளை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பெற்றோரும் இதில் கவனம் செலுத்தவேண்டும், '' என்றார்.