/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய பைக்கில் பழுது ஏற்பட்டதால் பணத்தை திருப்பி கொடுக்க உத்தரவு
/
புதிய பைக்கில் பழுது ஏற்பட்டதால் பணத்தை திருப்பி கொடுக்க உத்தரவு
புதிய பைக்கில் பழுது ஏற்பட்டதால் பணத்தை திருப்பி கொடுக்க உத்தரவு
புதிய பைக்கில் பழுது ஏற்பட்டதால் பணத்தை திருப்பி கொடுக்க உத்தரவு
ADDED : ஜூன் 16, 2025 11:39 PM

கோவை; புதிதாக வாங்கிய பைக்கில் அடிக்கடி பழுது ஏற்பட்டதால், பணத்தை திருப்பி கொடுக்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, பீளமேடு புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. ராம நாதபுரத்திலுள்ள ஆதித்யா மோட்டார் நிறுவனத்தில், 1.74 லட்சம் ரூபாய்க்கு பஜாஜ் பைக் வாங்கினார்.
சில மாதங்களே பைக்கை ஓட்டிய நிலையில், இன்ஜினில் பழுது ஏற்பட்டது.
பல முறை சர்வீஸ் செய்து, உதிரி பாகம் மாற்றிய பிறகும், கோளாறு சரியாகவில்லை. அடிக்கடி பழுது ஏற்படுவது குறித்து கேட்டும், முறையான பதில் அளிக்கவில்லை. வேறு பைக் மாற்றி தருமாறு கேட்டு, நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.
இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த நீதிபதி தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், பைக்கிற்கான தொகை, 1.74 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
பைக்கின் விலை மற்றும் இழப்பீடு தொகை முழுவதும் வாங்கிய பிறகு, எதிர்மனுதாரர்களிடம் பைக்கை ஒப்படைக்க, மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டது.