/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழு நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு
/
ஏழு நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு
ADDED : ஜன 29, 2025 10:35 PM
சூலுார்; மழை நீர் வடிகால் கட்டும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை ஏழு நாட்களுக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும், என, சூலுார் பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட, 13வது வார்டு, எஸ்.கே.கே., நகரில், பொது நிதியில் இருந்து சாக்கடை கால்வாய் மற்றும் சிறு பாலம் கட்டும் பணி நடக்கிறது. அங்கு பேரூராட்சிக்கு சொந்தமான ரோட்டில் ஒருவர் ஆக்கிரமித்து மதில் சுவர் கட்டியுள்ளது பேரூராட்சிக்கு தெரிந்தது.
ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், வடிகால் கட்டும் பணி முடங்கியது. அங்கு தேங்கும் சாக்கடை நீரால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். அங்கு தேங்கும் நீரை மோட்டார் மூலம் தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆக்கிரமிப்பை ஏழு நாட்களுக்குள் சொந்த செலவில் அகற்றி கொள்ள வேண்டும். இல்லையெனில் பேரூராட்சியின் மூலம் சட்ட விதிகளின்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அதற்கான தொகையும் வசூலிக்கப்படும், என, உத்தரவிடப்பட்டுள்ளது.

