/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மணப்பெண் அலங்காரத்துக்கு பெற்ற பணம் திருப்பித்தர உத்தரவு
/
மணப்பெண் அலங்காரத்துக்கு பெற்ற பணம் திருப்பித்தர உத்தரவு
மணப்பெண் அலங்காரத்துக்கு பெற்ற பணம் திருப்பித்தர உத்தரவு
மணப்பெண் அலங்காரத்துக்கு பெற்ற பணம் திருப்பித்தர உத்தரவு
ADDED : ஜூலை 21, 2025 11:12 PM
கோவை; திருமணம் ரத்து செய்யப்பட்டதால், மணப்பெண் அலங்காரத்திற்கு பெற்ற பணத்தை திருப்பி கொடுக்க, நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, ரத்தினபுரியை சேர்ந்த பெண், அவரது தங்கைக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மணப்பெண் அலங்காரத்திற்கு, கணபதி ஹவுசிங் யூனிட் பகுதியிலுள்ள தமிழ் செல்வி என்பவரது பியூட்டி பார்லரில், 2024, பிப்., 24ல் புக்கிங் செய்தார்.
இதற்கான கட்டணம், 41,750 ரூபாய், 'ஜிபே' வாயிலாக அனுப்பினார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, திருமணம் நின்று விட்டது.
இதனால், மணப்பெண் அலங்காரத்துக்கு கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டபோது தர மறுத்ததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 10,000 ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு, மீதி பணத்தை தராமல் தாமதித்து வந்தார் தமிழ்செல்வி.
இதனால் பணத்தை திருப்பி தரக்கோரியும், மனஉளைச்சலுக்கு இழப்பீடு கோரியும், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டிய மீதித்தொகை, 31,750 ரூபாயை திருப்பி கொடுப்பதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாயை எதிர்மனுதாரர் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.