/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு எண்ணும் மையத்தின் வரைபடம் அனுப்ப உத்தரவு
/
ஓட்டு எண்ணும் மையத்தின் வரைபடம் அனுப்ப உத்தரவு
ADDED : ஜன 04, 2024 12:28 AM
கோவை : கோவை லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையத்தின் வரைபடம் தயாரித்து அனுப்ப, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாண்டு தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில், தேர்தல் பிரிவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தடாகம் ரோட்டில் உள்ள ஜி.சி.டி., வளாகத்தில், ஓட்டு எண்ணிக்கை மையம் அமைகிறது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க 'ஸ்ட்ராங்' ரூம், ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்திய இதர பொருட்கள் இருப்பு வைக்க தனி அறை, ஓட்டு எண்ணும் அறை உதவி தேர்தல் அதிகாரி மற்றும் அலுவலர்கள் அமர்ந்து ஓட்டு எண்ணிக்கை கண்காணிக்க இட வசதி மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி, ஓட்டு எண்ணுவதற்கு, 14 டேபிள் போடுவது உள்ளிட்ட வசதிகள் செய்யும் வகையில், அறைகளை தயார் செய்ய வேண்டும்.
தேர்தல் பார்வையாளர் அறை, மாவட்ட தேர்தல் அதிகாரி அறை மற்றும் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவை ஏற்படுத்த வேண்டும். 'சிசி டிவி' கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கும் வகையில், எல்.இ.டி., திரை ஏற்படுத்துவது; இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட, வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இத்தனை ஏற்பாடுகளையும் செய்வதற்கு, தேவையான வசதிகள் குறித்த வரைபடம் தயாரித்து அனுப்ப, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வரைபடம் சமர்ப்பித்திருக்கின்றனர்.
அதன்படி, அறைகள் இருக்கிறதா; கூடுதல் அறைகள் ஒதுக்க வேண்டுமா, கூடுதல் வசதிகள் ஏதேனும் செய்ய வேண்டுமா என, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் நேரில் ஆய்வு செய்து, ஆணையத்துக்கு அறிக்கை அனுப்ப இருக்கிறார்.