/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோழிப்பண்ணை கட்டுமான பணியை நிறுத்த உத்தரவு
/
கோழிப்பண்ணை கட்டுமான பணியை நிறுத்த உத்தரவு
ADDED : செப் 19, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சுல்தான்பேட்டை ஒன்றியம் வஞ்சி புரம், ஜே.
கிருஷ்ணாபுரம் குடியிருப்பு பகுதியில் முட்டை கோழிப்பண்ணை கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், சூலுார் தாசில்தார் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அனுமதி பெற்று, கட்டுமான பணிகளை செய்ய தாசில்தார் அறிவுறுத்தினார். அதுவரை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.