ADDED : அக் 21, 2026 05:46 PM
அ நிறம் | அளவு
கோவை: பருவமழையையொட்டி செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் இன்று நடந்தது.
கமிஷனர் கட்டா ரவி தேஜா பேசுகையில், ‘‘மழைநீர் செல்லும் தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். நிவாரணப் பணிகளுக்கு மண்டலத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. பாதிப்புள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை உடனுக்குடன் செய்ய வேண்டும்,’’ என்றார்.
துணை கமிஷனர் சரஸ்வதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
