தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தட்கல் திட்டத்தில் உடனடி மின் இணைப்பு வேண்டும்

தட்கல் திட்டத்தில் உடனடி மின் இணைப்பு வேண்டும்

தட்கல் திட்டத்தில் உடனடி மின் இணைப்பு வேண்டும்


UPDATED : அக் 21, 2026 05:46 PM

ADDED : அக் 21, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 05:46 PM ADDED : அக் 21, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: தட்கல் திட்டத்தில் பணம் செலுத்திய விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் கூறியதாவது:

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தட்கல் திட்டத்தில் பணம் செலுத்திய விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க., ஆட்சியில், தட்கல் திட்டத்தில் பணம் செலுத்திய விவசாயிகளுக்கு, மின் இணைப்பு வழங்கவில்லை. விவசாயிகள் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி பணம் செலுத்தினர். ஆனால் பல ஆண்டுகளாக விவசாயிகள், எப்போது மின் இணைப்பு கிடைக்கும் என காத்திருக்கின்றனர்.

எனவே தற்போதைய த.வெ.க., அரசு, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தட்கல் திட்டத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு, மின் இணைப்பு வழங்குவது குறித்து, சட்டசபையில் அறிவிப்பு வெளியாகும் என, விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us