/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதிப்பீடு செய்யாத கட்டடங்கள் சொத்து வரி விதிக்க உத்தரவு
/
மதிப்பீடு செய்யாத கட்டடங்கள் சொத்து வரி விதிக்க உத்தரவு
மதிப்பீடு செய்யாத கட்டடங்கள் சொத்து வரி விதிக்க உத்தரவு
மதிப்பீடு செய்யாத கட்டடங்கள் சொத்து வரி விதிக்க உத்தரவு
ADDED : ஏப் 03, 2025 11:51 PM
சூலுார்; ஊராட்சிகளில் மதிப்பீடு செய்யப்படாத புதிய கட்டடங்களை கண்டறிந்து சொத்து வரி வசூலிக்க உத்தரவிடப்பட்டுளள்து.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக கமிஷனர் பொன்னையா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப் பியுள்ள உத்தரவு விபரம்:
சொத்து வரியை மதிப்பீடு செய்து, அந்த வருவாயை வசூலிப்பது கிராம ஊராட்சிகளின் முக்கிய பணியாகும். ஊராட்சி எல்லைக்குள் இருக்கும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் சுய நிதி நிறுவன கட்டடங்கள் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு, சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
மதிப்பீடு செய்யப்படாத கட்டடங்களை அடையாளம் கண்டு, அவற்றை வரி விதிப்புக்குள் கொண்டு வர முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய கட்டடங்களின் பட்டியலை கொண்டு, ஊராட்சி செயலர் மற்றும் சம்மந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணியாளர்கள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அந்த கட்டடங்கள் எந்த வகைப்பாட்டை சேர்ந்தது, தளங்களின் எண்ணிக்கை குறித்தும், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வரிவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.