/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமைச்சர் துவக்கி வைத்த உடல் உறுப்பு தான இயக்கம்
/
அமைச்சர் துவக்கி வைத்த உடல் உறுப்பு தான இயக்கம்
ADDED : டிச 24, 2024 07:08 AM

கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை,தன்னார்வ உடல் உறுப்புகள் தான பதிவு எண்ணிக்கையை, ஒரு லட்சத்துக்கும் மேல் எட்டும் முயற்சியாக, ஆன்லைன் உறுப்புகள் தான இயக்கத்தை துவக்கியுள்ளது.
தமிழக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்துடன்(டிரான்ஸ்டன்)இணைந்து, ஜன., பிப்., மற்றும் மார்ச் என, மூன்று மாத கால அளவில், இந்த இயக்கத்தை நடத்துகிறது. தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
இந்த ஆன்லைன் இயக்கம், பொதுமக்களுக்கு உறுப்புகள் தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, அவர்களை உடல் உறுப்பு தானம் வழங்க ஊக்குவிப்பதுடன்,ஆன்லைன் வாயிலாக உறுப்புகள் தான பதிவு செயல்முறையை, எளிமைப்படுத்துவதைநோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சி, பெரும் எண்ணிக்கையிலான உயிர்களை காக்க ஊக்குவிக்கும் என எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தெரிவித்தார்.
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், டிரான்ஸ்டன்உறுப்பினர் செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.