/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிப்.,4ம் தேதி நடக்கிறது இயற்கை விவசாய கண்காட்சி
/
பிப்.,4ம் தேதி நடக்கிறது இயற்கை விவசாய கண்காட்சி
ADDED : பிப் 01, 2024 05:41 AM
கோவை : இயற்கை விவசாயம் தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் வகையில், இயற்கை விவசாய கண்காட்சி, சரவணம்பட்டி குமரகுரு கல்லுாரி வளாகத்தில் வரும் 4ம் தேதி நடக்கிறது.
இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனை மற்றும் உள்ளூர் விவசாயிகள் குழுவாக ஒன்றிணைந்து செயல்படும் வகையில், ஜனனி ரீஜென் நிறுவனம் சார்பில், 'உயிர்சூழல் 2024' என்ற விவசாய தொழில்நுட்ப கண்காட்சி நடத்தப்படுகிறது.
இக்கண்காட்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வேளாண் நிபுணர்கள் பங்கேற்கின்றனர். இதில் நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் சவால்கள், மண் வளம் அதிகரிப்பு, இடு பொருட்கள், கருவிகள், முன்னெச்சரிக்கை என பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் தங்களின் அனுபவங்களை எடுத்துரைக்க உள்ளனர்.
உள்ளூர் கிராம விவசாயிகளை ஒன்றிணைக்க, குழுக்களும் உருவாக்கப்படவுள்ளன. இக்கண்காட்சியில், பங்கேற்க அனுமதி கட்டணம் இல்லை. மேலும் விபரங்களுக்கு, 80980 04064 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.