/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களின் பன்முகத்திறன் வளர்க்க அமைப்பு துவக்கம்
/
மாணவர்களின் பன்முகத்திறன் வளர்க்க அமைப்பு துவக்கம்
மாணவர்களின் பன்முகத்திறன் வளர்க்க அமைப்பு துவக்கம்
மாணவர்களின் பன்முகத்திறன் வளர்க்க அமைப்பு துவக்கம்
ADDED : ஜூலை 12, 2025 01:09 AM

கோவை; அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும், 'மகிழ் முற்றம்' மன்றத்தின், நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் குழு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் விழா, பல்வேறு பள்ளிகளில் நேற்று நடைபெற்றது.
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மேற்பார்வையில், மகிழ் முற்றம் மன்றத்தின் கீழ்குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என ஐந்து பிரிவுகளில், மாணவர்குழுக்கள் அமைக்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் 5ம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8ம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 12ம் வகுப்பிலிருந்து மாணவர்கள் குழுத் தலைவர்களாக தேர்வு செய்யப்படுவர். இருபாலர்பயிலும் பள்ளிகளில் ஒவ்வொரு குழுவுக்கும், ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி குழுத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதுவழக்கம். அதன்படி, பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, மசக்காளிப்பாளையம் நடுநிலைப்பள்ளி, காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிகளில், 2025-26 கல்வியாண்டிற்கானமகிழ் முற்றம் மாணவர் குழுபதவியேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது, மாணவர்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர், பொறுப்பாசிரியர்கள், மாணவர் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.