/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.கே.என்.எம்., சார்பில் 'நம் நலம்' ஆரோக்கிய முயற்சி
/
ஜி.கே.என்.எம்., சார்பில் 'நம் நலம்' ஆரோக்கிய முயற்சி
ஜி.கே.என்.எம்., சார்பில் 'நம் நலம்' ஆரோக்கிய முயற்சி
ஜி.கே.என்.எம்., சார்பில் 'நம் நலம்' ஆரோக்கிய முயற்சி
ADDED : ஏப் 19, 2025 11:57 PM

கோவை: ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட மாற்று மருத்துவத் துறையின் மூலம், 'நம் நலம்' என்ற ஒரு விரிவான ஆரோக்கிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, ஆயுர்வேதம், வர்மம்,யோகா மற்றும் இயற்கை மருத்துவம், மற்றும்குத்துாசி மருத்துவம் ஆகிய சிறப்பு கிளினிக்குகள் மூலம் முழுமையான மற்றும் இயற்கையான சிகிச்சை முறைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
'நம் நலம்' முயற்சியை, ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், 'நம் நலம், ஒற்றைத் தலைவலி, வலி மேலாண்மை மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்ற பொதுவான சுகாதார பிரச்னைகளை கையாள்வதில் கவனம் செலுத்தும்,'' என்றார்.
மருத்துவ செயல் இயக்குனர் டாக்டர் சந்தோஷ் குமார் டோரா, மாற்று மருத்துவ ஆலோசகர்கள் டாக்டர் பிரியதர்ஷினி, டாக்டர் பாபு, டாகடர் ஹர்ஷினி, குத்துாசி மருத்துவ ஆலோசகர் டாக்டர் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

