/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலாவதியான பஸ்கள் மலைப்பகுதியில் அச்சம்
/
காலாவதியான பஸ்கள் மலைப்பகுதியில் அச்சம்
ADDED : ஏப் 09, 2025 10:23 PM

வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக கிளை சார்பில், 38 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர நான்கு ஸ்பேர் பஸ்கள் உள்ளன. குறிப்பாக, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், பழநி, சேலம், மன்னார்காடு உள்ளிட்ட வெளியூர்களுக்கு வால்பாறையிலிருந்து நேரடி பஸ் இயக்கப்படுகிறது.
ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவையில் இயக்கப்பட்டு, காலாவதியான பழைய பஸ்கள் தான் வால்பாறையில் தற்போது இயக்கப்படுகின்றன. மழை காலத்தில் பெரும்பாலான பஸ்களில் மேற்கூரையில் நீர் கசிவதால், குடை பிடித்து தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
பெரும்பாலான பஸ்களில் டிரைவர் சீட் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. டிரைவர் சீட் முன் பகுதியில், பயணியர் ஏறி, இறங்குவதை கண்காணிக்க கண்ணாடி இல்லை. இங்கு, 10க்கும் மேற்பட்ட காலாவதியான பஸ்கள் வழித்தடத்தில் இயக்கப்படுவதால் பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பழைய பஸ்களுக்கு மேக்கப் செய்து, புதிய பஸ்கள் போன்று இயக்கப்படுகின்றன.