/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருச்செந்தூர் ரயிலில் கூட்ட நெரிசல்; கூடுதல் பெட்டி இணைக்க கோரிக்கை
/
திருச்செந்தூர் ரயிலில் கூட்ட நெரிசல்; கூடுதல் பெட்டி இணைக்க கோரிக்கை
திருச்செந்தூர் ரயிலில் கூட்ட நெரிசல்; கூடுதல் பெட்டி இணைக்க கோரிக்கை
திருச்செந்தூர் ரயிலில் கூட்ட நெரிசல்; கூடுதல் பெட்டி இணைக்க கோரிக்கை
ADDED : செப் 09, 2025 10:03 PM
பொள்ளாச்சி; பாலக்காடு - திருச்செந்தூர் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகளவு இருப்பதால், பொள்ளாச்சி, உடுமலை பகுதி மக்கள் பயணிக்க வசதியாக கூடுதல் பெட்டி இணைக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் (16731) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து காலை 6:10 மணிக்கு கிளம்பி, பொள்ளாச்சி, உடுமலை, பழநி வழியாக திருச்செந்தூருக்கு மாலை 3:25 மணிக்கு சென்றடைகிறது.
இந்த ரயிலில், நாள்தோறும் ஏராளமான பயணியர் பயணிக்கின்றனர். மேலும், விசேஷ நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
தற்போது, இந்த தினசரி ரயிலில், காலை நேரத்தில் பாலக்காட்டில் இருந்து கிளம்பும் போதே கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால், பொள்ளாச்சி, உடுமலை பகுதிக்கு வந்தடையும்போது பயணியர்கள் ஏற சிரமமாக உள்ளது.
குறிப்பாக, பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் தொலைதுாரத்துக்கு நின்று கொண்டே பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், மக்கள் பஸ் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது:
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை, 7:20 மணிக்கு, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் வருகிறது. ஆனால், இந்த ரயிலில் வார இறுதி நாட்களில் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் நிறைந்திருக்கும்.
ரயிலில் அமர இருக்கைகள் கிடைக்காமல், படிக்கட்டிலும், நடைபாதையிலும் அமர்ந்து பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால், பலர் ரயில் பயணத்தை தவிர்க்கின்றனர்.
எனவே, ரயில்வே நிர்வாகம் சார்பில், பொள்ளாச்சி, உடுமலை மக்கள் நலன் கருதி இப்பகுதிக்கென கூடுதல் பெட்டிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.